பஸ் சாரதியினால் துஷ்ப்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்ட சிறுமி சம்பவம் தொடர்பில் ஹப்புதளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்வதற்கென சென்ற பொழுது முறைப்பாட்டை ஏற்காது சிறுமியை துன்புறுத்தியுள்ளதாக ஆசிய மனித உரிமைகள் ஆணையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சிறுமியை துஷ்ப்பிரயோகம் செய்ததாக கூறப்படும் சாரதி உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் பண்டாரவளை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
Read More »மலையக மக்களின் சம்பள பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான 2 ஆயிரத்து 500 ரூபா இடைக்கால நிவாரண கொடுப்பனவு பேச்சுவார்தையில் சாதகமான முடிவு எட்டப்பட்டுள்ளதாக அமைச்சர் மனோ கணேஷன் தெரிவித்துள்ளார். பிரதமருடன் நேற்று மாலை இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த சாதகமான இணக்கப்பாடு எட்டப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் இன்றையதினம் இறுதி பேச்சுவார்தை ஒன்றும் இடம்பெறவுள்ளதாகவும் அமைச்சர் மனோ கணேஷன் தெரிவித்துள்ளார். இதேவேளை, பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான சம்பள பிரச்சினை குறித்து சாதகமான முடிவொன்று எட்டப்படும் என ...
Read More »சிதைவடைந்த நிலையில் சிசுவின் சடலம் மீட்பு
ஊவா பரணகமை லக்கிலேண்ட் தோட்டத்திலுள்ள வீடொன்றிற்கு அருகே உள்ள குப்பை கிடங்கில் இருந்து சேதமடைந்த நிலையில் சிசுவின் சடலமொன்று பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது. சுமார் 2-3 நாட்கள் வயதுடைய சிசுவின் சடலமே இவ்வாறு சிதைவடைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் இதுவரையில் எவரும் கைது செய்யப்படவில்லை. (ஆர். கோகுலன்)
Read More »தோனியுடன் செல்பி எடுத்த சூர்யா மற்றும் 24 திரைப்படம் பற்றிய ஒரு பார்வை
கழுகு பார்வையில் சிறகொன்று பறக்க, திரை விலகுகையில் பேசுகின்ற முதல் வசனங்கள், கேட்காத அளவுக்கு இரசிகர்களின் விசில் சத்தம், கைத்தட்டல்களால் திரையரங்கே ஒருகணம் அதிர, நடிகர் சூர்யா வில்லனாக நடித்திருக்கும் ’24’ படத்தை இயக்கியிருக்கின்றார் விக்ரம் குமார். இசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மானின் இசைப்புயல் வீச, மிகமிகத் துல்லியமான ஒளிப்பதிவைச் செய்திருக்கிறார் திரு. விஞ்ஞானி, டொக்டர் மற்றும் கடிகாரம் திருத்துனர் ஆகிய மூன்று வேடங்களில் சூர்யா கலக்கு கலக்க, சமந்தா, சரண்யா ...
Read More »பாடசாலையின் மதில் உடைந்து விழுந்ததில் 16 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
பதுளை – லுணுகல அல் – அமீன் முஸ்லிம் வித்தியாலத்தின் மதிலொன்று நேற்று மாலை சரிந்து விழுந்ததில், பாடசாலைக்கு கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளதுடன் பாதிக்கப்பட்ட மாணவர்கள் 16 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். பாடசாலையில் இடம்பெற்ற மேலதிக வகுப்புக்கு வந்திருந்த மாணவர்களே இந்த அனர்த்தத்தில் சிக்கிக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பாதிக்கப்பட்ட மாணவர்களில் நால்வர், மேலதிக சிகிச்சைகளுக்காக பதுளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ...
Read More »குலவிக்கல் தலையில் வீழ்ந்ததில் சிறுவன் பலி
ஹப்புதளை, தம்பேதென்ன தோட்டத்தில் 8 வயது சிறுவன் ஒருவனுடைய தலையில் குலவிக்கல் வீழ்ந்ததில், சிறுவன் பரிதாபமாக உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். காயமடைந்த சிறுவன் ஹப்புதளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக பதுளை வைத்தியசாலைக்கு மாற்றி அனுப்பிய போது படுகாயமடைந்த சிறுவன் உயிரிழந்ததாக அறியப்படுகிறது. (ஆர். கோகுலன்)
Read More »தீ விபத்தில் 16 வயது மாணவி பலி – மரணம் குறித்து சந்தேகம் நிலவுவதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்
குளியலறையொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 16 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் பலியான சம்பவமொன்று, பதுளை தெல்பத்த தோட்டத்தில் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இவ் தீ விபத்துக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படாத அதே வேளை, இவ் தீ விபத்து தொடர்பில் தமக்கு சந்தேகம் நிலவுவதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர். இந்த தீ விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பதுளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர். (ஆர். கோகுலன் )
Read More »தோட்ட அதிகாரிகள் மீது சாணியை கரைத்து ஊற்றியவர் கைது
ஹப்புதளை, பிடரத்மல தோட்ட அதிகாரிகள் மீது சாணியை கரைத்து ஊற்றியவரும் அவரது உறவினர்கள் இருவரும் ஹப்புதளை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். நிலத்தகராறு முற்றிப்போனதில் ஏற்பட்ட அமைதியின்மையின் போதே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன் போது காயமடைந்த அதிகாரி ஒருவர் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து, ஹப்புதளை பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்…
Read More »குளவிக்கொட்டுக்கு இலக்கானவர் பலி
எல்ல,பல்லகெட்டுவ பிரதேசத்தில் குளவிக்கொட்டுக்கு இலக்கான 47 வயதுடைய நபர் ஒருவர் இன்று மாலை உயிரிழந்துள்ளதாக எல்ல பொலிஸார் தெரிவிக்கின்றனர். (எஸ். பி. நாணயக்கார )
Read More »மீரியபெத்தையில் யானை தொல்லை (PHOTOS இணைப்பு )
கொஸ்லாந்தை மீரியபெத்தை பகுதியில் காட்டு யானைகளின் அச்சுறுத்தல் இருப்பதாக கூறப்படுகிறது. மண்சரிவு ஏற்பட்ட இவ் பிரதேசத்தில் காட்டு யானைகளின் அச்சுறுத்தல் காணப்படுவதால் பிரதேச மக்கள் பெரும் பீதியடைந்துள்ளனர். காட்டு யானைகள் மக்களின் குடியிருப்பு பகுதிகளை நோக்கி வருவதால் தமது குடியிருப்புகள் உட்பட பயிர் நிலங்கலும் சேதமாக்கப்படுவதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவித்துள்ள போதிலும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுவரையிலும் கவனம் செலுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. (ஆர். ...
Read More »