Home / Tamil / பாடசாலையின் மதில் உடைந்து விழுந்ததில் 16 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

பாடசாலையின் மதில் உடைந்து விழுந்ததில் 16 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

பதுளை – லுணுகல அல் – அமீன் முஸ்லிம் வித்தியாலத்தின் மதிலொன்று நேற்று மாலை சரிந்து விழுந்ததில், பாடசாலைக்கு கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளதுடன் பாதிக்கப்பட்ட மாணவர்கள் 16 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பாடசாலையில் இடம்பெற்ற மேலதிக வகுப்புக்கு வந்திருந்த மாணவர்களே இந்த அனர்த்தத்தில் சிக்கிக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாதிக்கப்பட்ட மாணவர்களில் நால்வர், மேலதிக சிகிச்சைகளுக்காக பதுளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை லுணுகல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

( க.கிஷாந்தன் )00020003001

About premalal

Check Also

பஸ் சாரதியினால் துஷ்ப்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்ட சிறுமிக்கு எதிராக செயல்படும் ஹப்புதளை பொலிஸார்

பஸ் சாரதியினால் துஷ்ப்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்ட சிறுமி சம்பவம் தொடர்பில் ஹப்புதளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்வதற்கென சென்ற பொழுது முறைப்பாட்டை ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *