ஊவா பரணகமை லக்கிலேண்ட் தோட்டத்திலுள்ள வீடொன்றிற்கு அருகே உள்ள குப்பை கிடங்கில் இருந்து சேதமடைந்த நிலையில் சிசுவின் சடலமொன்று பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.
சுமார் 2-3 நாட்கள் வயதுடைய சிசுவின் சடலமே இவ்வாறு சிதைவடைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் இதுவரையில் எவரும் கைது செய்யப்படவில்லை.
(ஆர். கோகுலன்)