பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான 2 ஆயிரத்து 500 ரூபா இடைக்கால நிவாரண கொடுப்பனவு பேச்சுவார்தையில் சாதகமான முடிவு எட்டப்பட்டுள்ளதாக அமைச்சர் மனோ கணேஷன் தெரிவித்துள்ளார்.
பிரதமருடன் நேற்று மாலை இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த சாதகமான இணக்கப்பாடு எட்டப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் இன்றையதினம் இறுதி பேச்சுவார்தை ஒன்றும் இடம்பெறவுள்ளதாகவும் அமைச்சர் மனோ கணேஷன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான சம்பள பிரச்சினை குறித்து சாதகமான முடிவொன்று எட்டப்படும் என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்டிருந்தார்.
இந்த விடயம் குறித்து மலையக அரசியல்வாதிகள் தொடர்ந்தும் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
Thanks to trueceylon