குளியலறையொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 16 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் பலியான சம்பவமொன்று, பதுளை தெல்பத்த தோட்டத்தில் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இவ் தீ விபத்துக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படாத அதே வேளை, இவ் தீ விபத்து தொடர்பில் தமக்கு சந்தேகம் நிலவுவதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த தீ விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பதுளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
(ஆர். கோகுலன் )